வவுனியாவில் பாகுபாடின்றி வீட்டுத் திட்டம் வழங்க நடவடிக்கை: நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன்வவுனியாவில் பாகுபாடின்றி அனைத்து மக்களுக்கும் புதிய வீட்டுத் திட்டங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கு.திலீபன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் ஏற்பாட்டில் வீடமைப்பு திட்ட இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த அவர்களுக்கும் வன்னி நடாளுமன்ற உறுப்பினரும், வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கு.திலீபன் அவர்களுக்கும் இடையில் கொழும்பில் உள்ள அமைச்சு அலுவலகத்தில் நேற்று சந்திப்பு நடைபெற்றுள்ளது.

இதன்போது, வன்னியில் வீடில்லாத மக்களுக்கு பாகுபாடின்றி புதிய வீட்டுத் திட்டம் வழங்க வேண்டும் எனவும், கடந்த காலங்களில் கட்டப்பட்டு நிலுவையில் உள்ள வீட்டுத் திட்டங்களை கட்டி முடிக்க நடவடிக்கை எடுக்குமாறும் நாடாளுமன்ற உறுப்பினரால் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை, ஏற்றுக் கொண்ட வீட்டுத்திட்ட இராஜாங்க அமைச்சர் விரைவில் வவுனியாவிற்கு விஜயம் செய்து வீட்டுத் திட்ட பிரச்சனைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் மேலும் தெரிவித்துள்ளார்.

hey