11 திகதி நாடு வழமைக்கு திரும்புமா?ம துபான சா லைகள் தி றக்கப்பட மா ட்டாது அரசு அ றிவிப்புஎதிர்வரும் 11ஆம் திகதி திங்கட்கிழமை நாட்டை பகுதியளவில் வ ழமைக்குக் கொண்டுவரும் அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு அமைவாக பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த வகையில், நாட்டின் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் செயற்பாடுகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதன் அடிப்படையில், கொழும்பு பங்குச் சந்தையின் நடவடிக்கைகள் எதிர்வரும் 11 திகதி முதல் மீள ஆ ரம்பிக்கப்படவுள்ளதாக தெ ரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் செ யற்பாடுகளை வழமைக்கு கொண்டுவரும் அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு அமைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை அறிவித்துள்ளது.

இதற்கமைய தினமும் இரண்டு மணித்தியாலங்கள் கொ டுக்கல் வாங்கல் நடவடிக்கைகளை மு ன்னெடுப்பத்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பங்குச் சந்தையின் தலைமை நிர்வாக அதிகாரி ரேணுகா விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

தினசரி முற்பகல் 11 மணிதொடக்கம் நண்பகல் 1 மணிவரை சேவை மு ன்னெடுக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நாட்டில் ஏற்பட்டுள்ள கொ ரோனா வை ரஸ் ப ரவல் காரணமாக கொழும்பு பங்குச் சந்தையின் நடவடிக்கைகள் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி தொடக்கம் த ற்காலிகமாக இ டைநிறுத்தப்பட்டமை கு றிப்பிடத்தக்கது.
அதே போன்று, நாடுமுழுவதும் விற்பனை அல்லது உற்பத்தி செயற்பாடுகளை மு ன்னெடுக்கும் வணிக நிறுவனங்களுக்கு விசேட ச லுகைகளை பெற்றுக்கொடுக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதன்படி, குறித்த நிறுவனங்களின் வாகனங்களுக்கு மாவட்டங்களுக்கு இடையிலான ஊ ரடங்கு அ னுமதிகளை பெற்றுக்கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவ்வாறான வாகனங்களுக்கு விசேட ஸ்டிக்கர் மற்றும் வாகன இலக்கம், வாகனத்தை செலுத்தும் சாரதி மற்றும் நடத்துனர் தொடர்பான விபரங்கள் பொலிஸ் தலைமையகத்திற்கு அனுப்படவேண்டுமென கோரப்பட்டுள்ளது.

இதேவேளை, மாவட்டங்களுக்கு இடையே பயணிக்கும் நிறுவனங்களின் வாகனங்களை செலுத்தும் சாரதி மற்றும் நடத்துனர்கள் சுகாதார ப ரிசோதக ர்களினால் உ றுதிப்படுத்தப்பட்ட சான்றிதழ்களை பெறவேண்டுமெனவும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

பொருட்கள் உற்பத்தி மற்றும் விநியோகம், மின் உபகரணங்கள் விநியோகம், பல்பொருள் அங்காடிகளுக்கு பொருற்களை கொண்டுசெல்லல் , பதப்படுத்தப்பட்ட உணவு விநியோக வலையமைப்புகள் போன்ற நடவடிக்கைகளுக்கு இவ்வாறு அனுமதி வழங்கப்பட்வுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வழமைக்கு கொண்டுவரப்பட்டாலும் ம துபான சா லைகள் தி றக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லையென அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக நாட்டில் ஊ ரடங்கு த ளர்த்தப்பட்ட வேளையில் ம துபான சா லைகளில் பொதுமக்கள் அதிகளவில் ஒன்றுகூடியதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை ஊ ரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும் நாளை மறுதினம் தொடக்கம் மேல்மாகாணத்தின் வழமையான நடவடிக்கைகளை தொடர்வதற்கு அரசாங்கங்கம் தீர்மானித்துள்ள நிலையில் ம துபா னசாலைகள் தி றக்கப்படுவது தொடர்பில் பல்வேறு தரப்பினரால் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இந்த நி லையிலேயே ம துபா ன சா லைகளை தி றக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லையென அரச தகவல்கள் வெளியாகியுள்ளன.

hey