வவுனியாவில் திறந்து வைப்பதற்காக காத்திருக்கும் தாய்,சேய் பாராமரிப்பு நிலையம்வவுனியாவில் கட்டி முடிக்கப்பட்ட தாய்,சேய் பாராமரிப்பு நிலைய கட்டடம் கடந்த ஐந்து வருடமாக திறந்து வைக்கப்படாமல் கா த்திருக்கின்றதாக இதனால் தாய்மார் பெரிதும் பா திப்புற்று வருவதாகவும் இந்நிலையத்தை திறந்து வைப்பதற்கு துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அவர்கள் கோ ருகின்றனர

வவுனியா பட்டாணிச்சூர், பட்டக்காடு பகுதிகளில் வசிக்கும் 1600 குடும்பங்களை உள்ளடக்கிய தாய், சேய் பராமரிப்பு நிலைய கட்டடம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் ஆட்சிக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு கட்டிமுடிக்கப்பட்டு ஐந்து வருடங்களாகியும் இன்று வரையிலும் பொது மக்கள் பாவ னைக்கு கையளிக்கப்படவில்லை.

தற்போது பொது நோக்கு மண்டபத்தில் கிராம அலுவலகர் அலுவலகம், தாய் சேய் பாராமரிப்பு நிலையம் , பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் , விஷேட தேவைகளுக்குட்பட்டவர்கள், சிவில் பா துகாப்புக்கூட்டங்கள் என்பன இடம்பெற்று வருவதால் அங்குள்ள தாய்,சேய் நிலைய பராமரிப்புக்காக வரும் தாய்மார் பல்வேறு அ சௌகரியங்களுக்கு முகம் கொடுக்கவேண்டிய நிலை ஏற்படுகின்றது.

இவ்வாறு தனியாக அமைக்கப்பட்டுள்ள தாய் சேய் பராமரிப்பு நிலையம் திறந்துவைக்கப்படமல் பல்வேறு அ சௌகரியங்கள் ஏற்படுவதாகவும் அரசாங்கத்தின் வடக்கு அபிவிருத்தி திட்ட நிதி ஒரு மில்லியன் ரூபாயில் அமைக்கப்பட்டு ஐந்து வருடங்கள் கடந்தும் குறித்த தாய்,சேய் பாராமரிப்பு நிலையம் மக்களின் பயன்பாட்டிற்கு கையளிக்கப்பட வில்லை.

எனவே குறித்த நிலையத்தினை திறந்து வைப்பதற்குரிய நடவடிக்கையினை அதிகாரிகள் பாராளுமன்ற உறுப்பினர்கள் துரிதமாக மேற்கொள்ளுாறு பொதுமக்கள் கோரிவருகின்றனர்.

hey