தங்கத்தின் விலை அதிரடியாக குறைக்கப்படும்? அரசாங்கத்தின் புதிய அறிவிப்பு…!தங்கத்தின் விலை

இரத்தினக்கல் மற்றும் ஆபரண தொழில் துறையினருக்கு விதிக்கப்பட்டுள்ள 14 வீத வருமான வரியை நீக்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தீர்மானித்துள்ளார்.

அத்துடன், தங்க இறக்குமதிக்கான 15 வீத வரியை நீக்குவதற்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இரத்தினக்கல் மற்றும் ஆபரணம் தொடர்பான இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பில், ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

hey