வவுனியா மக்களுக்கு பிரதேச செயலகத்தினால் விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்வவுனியா பிரதேச செயலக பிரிவினுள் குடும்பங்கள் தொடர்பான தகவல்களை திரட்டும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளமையினால்

அதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு வவுனியா பிரதேச செயலாளர் ந. கமலதாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

புதிதாக நியமனம் வழங்கப்பட்ட பட்டதாரிப்பயிலுனர்கள் மக்களின் வீடுகளுக்க வருகை தரும் சமயத்தில் அவர்களது அடையாளத்தினை உறுதிப்படுத்திக்கொண்டு அவர்களினால் கேட்கப்படும் விபரங்களை பூரணமாக வழங்கி ஒத்துழைப்பு வழங்குவதுடன்

குடும்ப விபர அட்டை அல்லது அதற்கு பதிலாக வழங்கப்பட்ட ஆவணம் , 2019 வாக்களார் இடாப்பு சிட்டை , குடும்ப அங்கத்தவர்களின் விபரங்கள் , பிறப்பு சான்றிதழ்கள் ,

தேசிய அடையாளஅட்டை , திருமணச்சான்றிதழ் , தொலைபேசி இலக்கம் , கொடுப்பனவு விபரம் , காணி ஆவணங்கள் என்பவற்றை பொதுமக்கள் தயார் நிலையில் வைத்திருக்குமாறும் மேலும் தெரிவித்தார்.

hey