வவுனியாவில் நெளுக்குளத்திலிருந்து இராசேந்திரகுளம் வரை மரங்கள் நாட்டி வைப்புநெளுக்குளம்

வவுனியா நெளுக்குளம் – இராசேந்திரகுளம் வரையிலான பகுதியில் மரங்கள் நாட்டி வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

குறித்த நிகழ்வு நெளுக்குளம் சந்தியில் இன்று (05.09.2020) காலை 10.30 மணியளவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மரநடுகை திட்டமானது நெளுக்குளம் இளைஞர்களினால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன் போது வவுனியா பிரதேச செயலாளர் ந. கமலதாசன் , வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளார் து.நடராஜசிங்கம் , கிராம சேவையாளர் சாந்தரூபன் , வவுனியா வைத்தியசாலையின் வைத்தியர் , இளைஞர்கள் , அரசியல் பிரமுகர்கள் , பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

hey