இலங்கை வங்கி விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!இலங்கையின் பிரதான நிதி நிறுவனமான இலங்கை வங்கிக்கு எ திராக சமூக வலைத்தளங்களில் போலி தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை வங்கியின் உள்ளக பி ரச்சினை காரணமாக வங்கி நிர்வாகம் மற்றும் வர்த்தக நடவடிக்கைககளுக்கு தடை ஏற்படுவதாக கூறி இலங்கை வங்கி மற்றும் அதன் அதிகாரிகளுக்கு எதிராக சமூக வலைத்தளங்கள் ஊடாக சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுவதாக இலங்கை வங்கி தெரிவித்துள்ளது.

இலங்கை வங்கி கடந்த 6 மாதத்தினுள் 6.9 பில்லியன் ரூபாய் இலாபம் பெற்று அரச வங்கி என்ற ரீதியில் அதிக இலாபத்தை பதிவு செய்துள்ளது.அரசாங்கம் செயற்படுத்திய 4 வீத வர்த்தகத்தை மீளவும் கட்டியெழுப்பும் கடன் யோசனை முறையின் கீழ் இலங்கை வங்கியினால் 22 பில்லியன் கடன் வழங்கிய நாட்டின் முதல் வங்கியாகியுள்ளது.

கொ ரோனா வை ரஸ் தொ ற்று பரவிய காலப்பகுதியில் அரசாங்க கொள்கை மற்றும் நாட்டின் பொருளாதாரத்திற்கு இலங்கை வங்கி முக்கிய பங்கு வகித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதனால் இலங்கை வங்கி தொடர்பிலான போலித் தகவல்களை நம்ப வேண்டாம் என வங்கி தெரிவித்துள்ளது.

hey