அரச ஊழியர்களின் மே மாதச் சம்பளத்தை ந ன்கொடையாக வழங்குமாறு கோரிக்கை…!!அரச ஊழியர்களின் மே மாதத்திற்கான சம்பளத்தை நன்கொடையாக வழங்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர கோரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டின் வரவு செலவுத் திட்ட அ ழுத்தங்களை மக்களின் மீது தி ணிக்காமல் இருப்பதற்காக மே மாதத்திற்கான மு ழுச் சம்பளத்தையோ அல்லது பகுதியையோ வழங்குமாறு அவர் கோ ரியுள்ளார்.

மே மாதச் சம்பளத்தை கைம்பெண்கள் மற்றும் அ னாதரவான பிள்ளைகள் நிதியத்திற்கு வழங்குமாறு அவர் தெரிவித்துள்ளார்.

அரச ஊழியர்களுக்கான சம்பளக் கொடுப்பனவிற்காக மாதம் ஒன்றுக்கு 100 பில்லியன் ரூபா பணம் தேவைப்படுகின்றது.

ஒரு மாத சம்பளத்தை அனைத்து அரச ஊழியர்களும் வழங்கினால் அந்த தொகை தி றைசேரிக்கு செல்லும் எனவும் இதன் மூலம் அரச செலவுகள் குறைந்து வருமானம் அ திகரிக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் ஊடாக நாட்டில் ஏற்பட்டுள்ள க டுமையான க டன் அ ழுத்தங்களை முகாமைத்துவம் செய்து கொள்ள முடியும் என ஜனாதிபதியின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெளிநாடுகளிலிருந்து கடன், ந ன்கொ டைகள் பெற்றுக்கொள்ளும் அதேவேளை எமது சக்தியையும் நாம் பி ரதிபலிக்க வேண்டியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் பிரதமரின் செயலாளர், அமைச்சரவை செயலாளர், அரசாங்க திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், அரச வங்கிகள் உள்ளிட்ட நிறுவனங்களின் பிரதானிகளுக்கு ஜனாதிபதியின் செயலாளர் கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தின் அனைத்து பணியாளர்களும் தங்களது ச ம்பளத்தை வழங்குமாறு கோ ரிக்கை வி டுத்துள்ளதாகவும், ஏனைய அரச ஊழியர்களும் தங்களது ச ம்பளங்களை வழங்கி இதில் இ ணைந்து கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனைவருக்கும் மாதச் சம்பளத்தை வழங்க மு டியாதிருக்கலாம் எனவும் அவ்வாறானவர்கள் அரைவாசி சம்பளம், ஒரு கிழமைக்கான சம்பளம் அல்லது நாள் ஒன்றுக்கான ச ம்பளத்தையேனும் நன்கொடையாக வழங்க முடியும் என ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்துள்ளார் என தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

hey