வவுனியா செட்டிக்குளம் பிரதான பாதையின் வீதியோர பற்றைகளை அகற்றும் நடவடிக்கை முன்னெடுப்புசெட்டிகுளம்

வவுனியா – செட்டிக்குளம் பிரதான பாதையின் வீதியோரங்களில் பற்றைகள் சூழ்ந்து காணப்பட்டதினால் வீதி தெளிவின்னை காரணமாக வீதி வி பத்துக்கள் ஏற்பட்டன.

இதனை கருத்தில் கொண்டு வீதி அபிவிருத்து அதிகார சபையினர் குறித்த வீதியில் இரு பகுதிகளிலும் காணப்பட்ட பற்றைகளை அகற்றும் நடவடிக்கையில் இன்று (29.08.2020) ஈடுபட்டிருந்தனர்.

குறித்த நடவடிக்கையின் காரணமாக வீதி வி பத்துக்கள் இடம்பெறும் சந்தர்ப்பங்கள் குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

hey