வவுனியாவில் விதை நெல் விற்பனை ஆரம்ப நிகழ்வுவவுனியாவில்

வவுனியா விதை உற்பத்தியாளர் சம்மேளத்தினால் விவசாய திணைக்களத்தின் விதிமுறைகளிற்கு அமைவாக உற்பத்தி செய்யப்பட்ட விதை நெல் விற்பனை ஆரம்ப நிகழ்வு வவுனியாவில் நேற்று இடம்பெற்றுள்ளது.

சம்மேளனத்தின் தலைவர் சி.பத்மநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் முதன்மை அதிதியாக கலந்து கொண்ட மாவட்ட அரச அதிபர் சமன் பந்துலசேன விற்பனை நிகழ்வை ஆரம்பித்து வைத்திருந்தார்.

குறித்த விதை நெல்வகைகள் மாவட்டத்திற்குள்ளேயே உற்பத்தி செய்யப்பட்டு விவசாய திணைக்களத்தால் அதன் முளைதிறன் பரிசோதிக்கப்பட்டு குறைந்த விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது.

அந்தவகையில் BG-352, BG-360, AT-362, BW-367, BG-406, BG-450 இனங்களை கொண்ட விதை நெல்வகைகள் விற்பனைக்காக இருப்பில் உள்ளதுடன், 20.5 கிலோகிராம் அளவுகொண்ட நெல்மூடை 1800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதில் மாகாண நீர்ப்பாசன பிரதிப்பணிப்பாளர் ந.சிறிஸ்கந்தராயா, கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் இ.விஜயகுமார், பிரதி விவசாய பணிப்பாளர் தெ.யோகேஸ்வரன், பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் அருந்ததி வேல்சிவானந்தம் மற்றும் கமக்காரர் அமைப்புகளின் பிரதிநிதிகள், விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

hey