வவுனியா நகர் முழுவதும் பல வருடங்களுக்கு பின் கட்டப்பட்டுள்ள நந்திக்கொடிகள்வவுனியாவில்

அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலின் மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (28.08.2020) நடைபெறவுள்ள நிலையில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வவுனியா நகரிலுள்ள பெரும்பாலான வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக நந்திக்கொடிகள் கட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக வவுனியாவின் பஜார் வீதி, மில் வீதி போன்ற நகரின் முக்கிய இடங்களில் நந்திக்கொடி கட்டப்பட்டுள்ளது.

வடக்கின் வாசலாக கருதப்படும் வவுனியா மண்ணில் இந்து சமயத்தினர் இச்செயற்பாடு சமூகத்தினர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

வவுனியாவில் பல வருடங்களுக்கு பின்னர் நகர் முழுவதும் நந்திக்கொடி கட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

hey