வவுனியாவில் அரச நியமனங்கள் நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்திப்புவவுனியாவில்

வவுனியா , மன்னார் , முல்லைத்தீவு , கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த வடமாகாண அரச நியமனம் நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையிலான விஷேட கலந்துரையாடல் வடமாகாண பட்டதாரிகள் மனிதவள அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவர் ம . ஆனந்தராஜா தலமையில் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடல் வவுனியா ஹோரவப்போத்தானை வீதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் இன்று (25.08.2020) காலை 10.00 மணியளவில் இடம்பெற்றிருந்தது.

அரச நியமனம் நிராகரிக்கப்பட்ட அனைத்துப்பட்டதாரிகளுடன் கடற்தொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பின் போது ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் கவனத்திற்குக் கொண்டுவரும் நோக்குடன் பல்வேறு விடயங்கள் பட்டதாரிகளினால் தெரிவிக்கப்பட்டது.

hey