வட மாகாணத்தில் உள்ள உணவகங்களில் உச்ச விலையை தொட்ட உழுந்து வடை மற்றும் தோசைவட மாகாணத்தில் குறிப்பிட்ட உணவுகளுக்கு சடுதியான விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சு ட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உணவகங்களில் உளுந்து வடை மற்றும் தோசை சாதாரண மக்கள் கொள்வனவு செய்ய முடியாத அளவிலான விலையில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

உளுந்து ஒரு கிலோகிராம் ஆயிரம் ரூபாவுக்கும் தேங்கா எண்ணை ஒரு லீற்றர் 600 ரூபாவுக்கும் செய்யப்படுவதால் உணவுகளின் விலையும் அதிகரித்துள்ளன.

இந்த விலை அதிகரிப்பிற்கு முன்னர் உளுந்து வடை ஒன்று 20 ரூபாவுக்கும் தோசை ஒன்று 15 ரூபாவுக்கும் விற்பனையாகியுள்ளது. எனினும் தற்போது உளுந்து வடை ஒன்று 50 ரூபாவுக்கும் தோசை ஒன்று 40 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

வடை மற்றும் தோசை ஆகிய இரண்டிற்கும் உளுந்து தேவைப்படுவதனால் வடையின் அளவும் சிறியதாக்கி அதிக விலையில் விற்பனை செய்யப்படுவதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

வடக்கின் அன்றாட கூலித் தொழில் செய்பவர்கள் உணவிற்காக வடை மற்றும் தோசை கொள்வனவு செய்கின்றனர். எனினும் தற்போது ஏற்பட்டுள்ள அதிகரிப்பு காரணமாக மக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

வட மாகாண விவசாயிகள் உளுந்து பயிர் செய்கையை நி றுத்தியுள்ளமை மற்றும் கொ ரோனா வை ரஸ் காரணமாக இந்தியாவில் இருந்து உளுந்து இறக்குமதி செய்யப்படாமையினாலும் இந்த அளவு விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

hey