மத்திய வங்கி கடன் அட்டைகளுக்கு அதிரடி வட்டி சலுகைகளை வழங்குவதாக அறிவிப்புகொ ரோனா நிலவரத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் நெருக்கடியை தணிக்க மேலும் சில சலுகைகளை இலங்கை மத்திய வங்கியின் நாணய சபை அறிவித்துள்ளது.

கடன் அட்டைகள், தங்கக்கடன் அடகு வட்டி, வங்கி மேலதிக பற்றுக்கான வட்டி ஆகியன குறைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 28 சதவீதமாக இருந்த கடன் அட்டைகள் (கிரெடிட் கார்ட்) வட்டி விகிதம் 18% ஆகவும், வங்கி மேலதிக பற்றுக்கான வட்டி விகிதம் 16% ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.

மேலும், தங்கக்கடன் அடகு வட்டி விகிதத்தை 10 சதவீதமாகக் குறைத்து, அபராத வட்டி விகிதத்தை 2 சதவீதமாகக் குறைத்துள்ளது.

hey