உங்கள் பிரதேசத்தில் மின்வெட்டு எப்போது? விபரம் உள்ளேஉங்கள் பிரதேசத்தில் மின்வெட்டு எப்போது? விபரம் உள்ளே

நாடாளாவிய ரீதியில் இன்று முதல் ஒரு மணி நேர மின்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ள நிலையில் நான்கு கட்டங்களாக இந்த மின்விநியோகத்தடை அமுலாக்கப்படவுள்ளதாக, மின்சார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

இதன் அடிப்படையில் மாலை 6 மணி முதல் 7 மணி வரை சில பகுதிகளிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை சில பகுதிகளிலும் , மின்விநியோகத் தடை அமுலாக்கப்படவுள்ளது. அத்துடன், இரவு 8 மணி முதல் 9 மணி வரை சில பகுதிகளிலும் மற்றும் இரவு 9 மணி முதல் 10 மணி வரை சில பகுதிகளிலும் இவ்வாறு மின்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இன்று முதல் எதிர்வரும் 4 நாட்களுக்கு இவ்வாறு மின்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

இதற்கமைவாக மின்விநியோகத் தடை அமுலாக்கப்படடுள்ள பகுதிகள் குறித்த அறிக்கை இலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ளது

இந்த நிலையில் கீழ்காணும் தொலைப்பேசி எண்ணுக்கு அழைப்பு விடுத்து மின்விநியோகத்தடை குறித்த மேலதிக தகவல்களை பெற்றுகொள்ள முடியும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

hey