வவுனியாவில் பாராளுமன்ற உறுப்பினர் திலீபன் அவர்களுக்கு அமோக வரவேற்புவவுனியாவில்

வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், புதிய பாராளுமன்ற உறுப்பினருமான கு.திலீபனுக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்வு ஒன்று இன்று (14.08.2020)) வவுனியாவில் இடம்பெற்றது.

வவுனியா அச்சக சங்க நண்பர்கள் மற்றும் வர்த்தக நண்பர்களின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

வவுனியா கந்தசாமி ஆலய முன்றலில் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் மாலை அணிவிக்கப்பட்டு மேளதாள வாத்தியத்துடன் வாடி வீட்டுக்கு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டு கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கட்சி ஆதரவாளர்கள், வர்த்தகர்கள், அச்சக உரிமையாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

hey