இலங்கையில் தொழில் புரியும் வெளிநாட்டவர்களுக்கான ஓர் அறிவித்தல்இலங்கையில் தொழில் புரியும் வெளிநாட்டவர்கள் கட்டாயம் வரியை செலுத்த வேண்டும் என தேசிய இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வரும் வகையில், வெளிநாட்டவர்கள் இலங்கையில் சம்பாதிக்கும் பணத்திற்கு வரி செலுத்துவதற்கு பதிலாக “தனிநபர் முற்பண வரி”யை செலுத்த வேண்டும் என திணைக்களம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதற்கு அமைய தொழில் வழங்குனர்கள் 2017 இலக்கம் 24 தேசிய வருமான வரி சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய ஊழியர்களின் விருப்பத்தின்படி அவர்களின் சம்பளத்தின் தொகை பிடித்து இந்த வரியை தேசிய இறைவரி திணைக்களத்திற்கு செலுத்த வேண்டும்.

இலங்கையில் தங்கியிருக்கும் மற்றும் இலங்கை குடியுரிமையை பெற்ற ஊழியர்களிடம் மாத்திரமே விருப்பத்தை பெற வேண்டும். இலங்கை குடியுரிமைச் சட்டத்தின் கீழ் இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் மற்றும் இலங்கை பிரஜைகளே இந்த வரையறைக்குள் வருகின்றனர்.

hey