வவுனியாவில் 1258 பேருக்கு விரைவில் நியமனம்வவுனியாவில்

ஒரு லட்சம் பேருக்கான வேலை வாய்ப்பில் தேர்வு செய்யப்பட்டவர்களிற்கு எதிர்வரும் 31ம் திகதி முதல் பயிற்சி நெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மாவட்டச் செயலகங்கள் தெரிவிக்கின்றன.

நாடு முழுவதும் ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் திட்டத்தில் வடக்கு மாகாணத்தில் இருந்து 13 ஆயிரத்து 270 பேர் பயிற்சிக்கு தேர்வாகியுள்ளனர்.இவ்வாறு தேர்வானவர்களில்

வவுனியா மாவட்டத்தில் இருந்து ஆயிரத்து 258 பேரும் தேர்வாகியுள்ளனர்.

இவ்வாறு தேர்வானவர்களிற்கு முதலில் இரு வாரகால விளக்கப் பயிற்சியும்
அதன் பின்பு 6 மாதகால செயல்முறை பயிற்சிகளும் தொழில் தகமை சான்றிதழுடன் வழங்கப்படவுள்ளது.

இவ்வாறு வழங்கப்படும்
பயிற்சிக் காலத்தில் 22 ஆயிரம் ரூபா கொடுப்பணவு வரங்கப்படும்.இந்த நியமனத்திற்கான தேர்வுகள் மூன்று மாதங்களின் முன்பே நிறைவு செய்யப்பட்டபோதும்

நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பிற்பாடு வழங்கும் நோக்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தது.

hey