வவுனியாவில் 10 வருடங்களுக்கு பின் மன்னார் வீதிகளுக்கு வரவிருக்கும் மாற்றம்வவுனியாவில்

10 வருடங்களுக்கு மேலாக குண்டும் குழியுமாக காணப்பட்ட வவுனியா – மன்னார் பிரதான வீதி செப்பனிடும் பணிகள் துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடனுதவியுடன் இணைக்கப்பட்ட வீதிகள் புனரமைப்புத் திட்டத்தின் கீழ் இவ் புனரமைக்கப்படுகின்றன.

குறித்த வீதிகள் செப்பனிடும் பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டிந்த போதிலும் கோ விட்-19 காரணமாக முற்றாக த டைப்பட்டிருந்தது.

தற்போது இலங்கையில் கோ விட் – 19 இன் தா க்கம் குறைவடைந்துள்ள நிலையில் துரித கதியில் வீதி செ ப்பனிடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தற்போது வவுனியா – மன்னார் பிரதான வீதியில் காணப்படும் பா லங்களை அமைக்கப்பட்டு வருவதுடன் கற்பகபுரம் – பம்மைமடு போன்ற பகுதி வரை காபற் ஈடுவதற்குரிய முதற்கட்ட நடவடிக்கையும் இடம்பெற்று வருகின்றன.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கண்துடைப்புக்காக வீதிகளின் குழிகளை அடைக்கும் பணிகளே வருடாவருடம் இடம் பெறுகின்ற போதும் கு ழிகளும் முழுமையாக அடைக்கப்படவில்லை

என தெரிவித்துள்ள மக்கள் பிரமணாலங்குளம் பகுதியில் வவுனியா மன்னார் பிரதான வீதியில் வீதியின் நடுவே ‘மன்னார் வீதி விவசாய நிலமாக மாற்றப்பட்டுள்ளது

‘ என்ற வாசகத்தினை தாளில் எழுதி அதனை வாழை மரத்தில் கட்டி வாழை மரத்தினை வீதியில் நடுவே காணப்பட்ட கு ழியினுள் நாட்டிய சம்பவங்களும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

hey