வவுனியா மாவட்ட செயலகத்திலிருந்து வாக்களிப்பு நிலையத்திற்கு வாக்கு பெட்டிகள் எடுத்துச் செல்லப்படுகின்றனவவுனியா

வவுனியா மாவட்ட செயலகத்திலிருந்து வாக்களிப்பு நிலையத்திற்கு வாக்கு பெட்டிகள் எடுத்துச் செல்லப்படுகின்றன

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்புகள் நாளையதினம் (05.08) இடம்பெறவுள்ள நிலையில் வாக்குபெட்டிகள் எடுத்துச்செல்லப்படும் நடவடிக்கைகள் இன்று (04.08) காலை 8.00மணி தொடக்கம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வாக்கு பெட்டிகளை எடுத்துச்செல்வதற்காக 20க்கு மேற்பட்டஅரச மற்றும் தனியார் பேரூந்துகள் பயன்படுத்தப்படுகின்றன

வன்னி மாவட்ட தேர்தல் தொகுதியில் வவுனியா மாவட்டத்தில் 1,19,811 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில் அவர்களுக்காக 141வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் வவுனியா மாவட்டத்தில் 4200 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் 1500க்கு மேற்பட்ட அரச உத்தியோகத்தர்களும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

hey