வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க வேண்டாம்! தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள எ ச்சரிக்கைவாக்காளர்களின் வாக்குகளுக்காக பணம் கொடுப்போர் தேர்தலில் வெற்றிப்பெற்றாலும் அவர்களின் நாடாளுமன்ற ஆசனத்தை இ ழப்பார்கள் என்று எ ச்சரிக்கப்பட்டுள்ளது.

கு ற்றச்சாட்டு நிரூபிக்கப்படுமானால் குறித்த வேட்பாளர்களின் வெற்றி செல்லுபடியற்றதாக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணையக தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

விளம்பரத்திற்கு கீழே செய்திகள் தொடரும்

இதுவரை பல்வேறு இடங்களில் இருந்தும் வேட்பாளர்கள் வாக்குகளை தக்கவைத்துக்கொள்வதற்காக சேலைகளை வழங்குவதாகவும், ம துபா னங்களை விநியோகிப்பதாகவும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் வாக்குகளுக்காக பணம் கொடுப்போரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியும் என்று மஹிந்த தேசப்பிரிய சு ட்டிக்காட்டியுள்ளார்.

வாக்காளர்களில் பெரும்பாலானோர் தாம் யாருக்கு வாக்களிக்கவேண்டும் என்பதை தீர்மானித்துவிட்டார்கள். எனவே அவர்களை வேறு வழிகளில் மாற்றமுடியாது என்றும் தேர்தல்கள் ஆணையகத்தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

hey