வவுனியாவில் தேர்தலுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் நிறைவுவவுனியாவில்

பாராளுமன்ற தேர்தல் நாளை மறுதினம் (05) நடைபெறவுள்ள நிலையில் தேர்தலுக்கான அனைத்து ஏ ற்பாடுகளும் நி றைவடைந்துள்ளது.

வவுனியாவில் 141 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ள நிலையில் குறித்த நிலையங்களில் பா துகாப்பு க டமைகளில் பொ லிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வாக்களிப்பு நிலையங்களாக செயற்படவுள்ள பாடசாலைகள் மற்றும் பொதுக்கட்டிடங்களை சுகாதார நடைமுறைகளுக்கு ஏற்ற வகையில் வாக்களிப்புக்கு ஏற்றதாக அப்பகுதி கிராம சேவையாளர்கள் மற்றும் தேர்தல் திணைக்கள அதிகாரிகளினால் ஒழுங்குபடுத்தப்பட்டு வருகின்றன.

உள்ளுர் தேர்தல் கண்காணிப்பாளர்களும் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று வாக்களிப்பு நிலைய சூழலை அவதானித்து வருவதுடன் தேர்தல் மு றைகே டுகள் மற்றும் ன்மு றைகள் தொடர்பில் கவனம் செலுத்தி வருகின்றமையும் அவதானிக்க முடிகின்றது.

வன்னி மாவட்ட தேர்தல் தொகுதியில் 6 பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக வவுனியா மாவட்டத்தில் மாத்திரம் 1,19,811 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

hey