தேர்தலின் பின்னர் 1 இலட்சத்து 50 ஆயிரம் வேலைவாய்ப்பு – ஜனாதிபதிபொதுத் தேர்தலின் பின்னர் பட்டதாரிகள் மற்றும் குறைந்த வருமானம் பெறுவோருக்கு ஒரு இலட்சத்து ஐம்பத்தாயிரம் தொழில் வாய்ப்புக்கள் வழங்கப்படும் என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

களுத்துறை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் இதனைத் தெரிவித்த ஜனாதிபதி மேலும் கூறுகையில் ,

அரச சேவையில் 15 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் உள்ளனர். எனினும் சேவைகளை பெற்றுக்கொள்வதில் மக்கள் முகங்கொடுத்துவரும் பிரச்சினைகள் குறித்து நாளாந்தம் தகவல்கள் வருகின்றன. எனவே ஊ ழல், மோ சடிகளை ஒ ழித்து வினைத்திறனான அரச சேவை தாபிக்கப்படும்.

இறக்குமதி வர்த்தக முறைமைக்கு பதிலாக உள்நாட்டு உற்பத்திகளுக்கு முக்கியத்துவமளிக்கும் பொருளாதார செயற்பாடுகளுக்கு அரசாங்கம் வழி செய்துள்ளது. விவசாயம் மற்றும் உற்பத்திகளில் ஈடுபட்டு அதன்மூலம் அதிகபட்ச பிரயோசனத்தை மக்கள் பெற்றுக்கொள்ள வேண்டும்.

நவீன தொழிநுட்பத்தின் மூலம் விவசாய பொருளாதாரம் ப லப்படுத்தப்பட வேண்டும். அதற்காக விவசாயப் பயிர்களை இறக்குமதி செய்வதை நிறுத்தி, உள்நாட்டு அறுவடைகளுக்கு அதிக விலையை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பட்டதாரிகள் மற்றும் குறைந்த வருமானம் பெறுவோருக்கு ஒரு இலட்சத்து ஐம்பத்தாறாயிரம் தொழில்களை வழங்குதல் தேர்தலின் பின்னர் இடம்பெறும். இந்த அனைத்து சந்தர்ப்பங்களும் நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு உதவும் .

களுத்துறை மாவட்டத்தில் பல பிரதேசங்களில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வுகளை பெற்றுத் தரப்படும். களுத்துறை தாதியர் கல்லூரியை புனர்நிர்மாணம் செய்வது குறித்து கவனம் செலுத்தப்படும். பாணந்துறை மத்திய மகா வித்தியாலயத்தின் கட்டிடங்களை புனர்நிர்மாணம் செய்வது தொடர்பாகவும் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றப்படும்.

hey