வவுனியாவில் கூழ் மற்றும் கொழுக்கட்டையுடன் சிறப்பாக கொண்டாடப்பட்ட ஆடிப்பிறப்பு நிகழ்வுவவுனியா ஆடிப்பிறப்பு

வவுனியா தர்மலிங்கம் வீதியிலுள்ள சோமசுந்தரப் புலவர் நினைவுச் சிலையடியில் இன்று (16.07.2020) காலை 8.30 மணியளவில் வவுனியா முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தின் அனுசரணையில் வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் ஆடிப்பிறப்பு நிகழ்வுகள் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் சோமசுந்தரப் புலவரின் நினைவுரையினை தமிழருவி சிவகுமார் நிகழ்த்தியதுடன் வவுனியா விபுலானந்தா கல்லூரி மாணவர்களின்

ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை பாடசாலைப் பாடியதுடன் சோமசுந்தரப் புலவரின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந் நிகழ்வில் பிரதேச கலாச்சார உத்தியோகத்தர் வீ.பிரதீபன் , தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணன், முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தலைவர் ரவீந்திரன்,

வெளிச்சம் அறக்கட்டளை அமைப்பின் தலைவர் லம்போதரன் , வர்த்தக சங்க உறுப்பினர்கள் , நகரசபை ஊழியர்கள் , சமூக ஆர்வலர்கள், வர்த்தகர்கள் ஊடகவியலாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

இறுதியில் ஆடிப்பிறப்பை முன்னிட்டு கூழ் வழங்கப்பட்டது.

hey