வவுனியா உட்பட அனைத்து தனியார் பாடசாலைகள், கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிப்பு!அரச பாடசாலைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து தனியார் பாடசாலைகள் மற்றும் தனியார் கல்வி நிலையங்களும் மூடப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அந்தவகையில், எதிர்வரும் 13ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் அரச மற்றும் தனியார் பாடசாலைகள், கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சினால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கையைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெருமவிற்கும் கல்வித்துறை சார்ந்த அதிகாரிகளுக்கும் இடையில் கல்வி அமைச்சின் வளாகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

hey