வவுனியாவில் இரவு வேளையில் ஒளிராத வீதி மின் விளக்குகள் பகலில் ஒளிர்கின்றனவவுனியாவில்

வவுனியா நகரசபைக்குட்பட்ட பல பகுதிகளில் இரவு நேரத்தில் வீதி மின்விளக்குகள் இன்மையினால் மக்கள் பல இ ன்னல்களுக்கு முகங்கொடுக்கும் இச் சமயத்தில் வவுனியா நகரசபைக்குட்பட்ட சில இடஙக்ளில் பகல் நேரங்களிலும் வீதி விளக்குகள் ஒளிர்வதினை அவதானிக்ககூடியதாகவுள்ளது.

குறித்த பகுதிகளில் இரவு வேளைகளில் ஒளிரவிடப்படும் மின் விளக்குகள் பகல் வேளைகளில் அணைக்கப்படாமல் தொடர்ந்து 24மணி நேரமும் எ ரிந்து கொண்டிருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது

குறிப்பாக இன்று (12.07.2020) பிற்பகல் 2.00 மணியளவில் வவுனியா நகரின் வைரவர் கோவில் வீதி , வைரவர் கோவில் வீதி மூன்றாம் ஒழுங்கை , நகரசபை பூங்கா வீதி போன்ற பகுதிகளில் மின் விளக்குகளும் ஒளிர்ந்து இருப்பதை அவதானிக்க கூடியதாகவிருந்தது.

இவ்விடயம் தொடர்பாக இலங்கை மின்சாரசபையின் வவுனியா பிராந்திய காரியாலயத்தினை தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு வினாவிய போது

வீதி மின்விளக்குகளை பகல் நேரங்களில் அணைப்பது வவுனியா நகரசபையினரே, இவ்விடயம் தொடர்பாக வவுனியா நகரசபையினரிடம் தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்.

வீதி மின்விளக்குகள் குறித்து வவுனியா நகரசபையினர் எவ்வித அ க்கறையும் எடு ப்பதில்லையென க வலை தெரிவிக்கும் மக்கள் மின்சாரம் வீ ணாகுவது குறித்து தமது அ திருப்தி களை வெளியிட்டுள்ளனர்.

hey