வவுனியாவில் 3000 முகக் கவசங்கள் இலவசமாக வழங்கி வைப்புவவுனியாவில்

தற்போது உலக நாட்டு மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ள கொ ரோனா வை ரஸ் இலங்கையில் பரவி வரும் நிலையில் இதனை த டுக்கும் முகமாக கொ ரோ னா தொற்றிலிருந்து மக்கள் தங்களையும் மற்றையவர்களையும் பா துகாக்கும் நோக்கில் வவுனியா நகரில் இலவசமாக மூவாயிரம் முகக்கவசம் (மாஸ்க்) வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

ஸ்ரீலங்கா டெலிகொம் பிஎல்சி தொலைத்தொடர்பு நிலையத்தினால் இலங்கை முழுவதும் ஒரு மில்லியன் முகக்கவசம் (மாஸ்க்) விநியோகிக்கும் திட்டத்தின் கீழ் இந் நடவடிக்கை வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந் நிகழ்வில் பொலிஸ் உயர் அதிகாரிகள், வர்த்தக சங்கத்தினர், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

hey