வவுனியாவில் தரம் 5,11,13 மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்வவுனியா

நான்கு கட்டங்களாக பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய இரண்டாம் கட்டமாக நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளும் கல்வி நடவடிக்கைகளுக்காக இன்றையதினம் (06.07.2020) திறக்கப்பட்டுள்ள நிலையில் வவுனியா மாவட்டத்திலும் பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ளன

அதனடிப்படையில் தரம் 05, 11 மற்றும் தரம் 13 மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் சுகாதார நடைமுறைகளை பேணி (சமூக இடைவெளி , கைசுத்தம் , முகக்கவசம்) நடைபெறுகின்றது.

தரம் 5 முதல் தரம் 11 வரையான மாணவர்களுக்கு காலை 7.30 மணி முதல் 1.30 மணி வரை கல்வி நடவடிக்கைகள் நடைபெறவுள்ளதுடன் தரம் 13 மாணவர்களுக்காக காலை 7.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை கல்வி நடவடிக்கைகள் இடம்பெறும் என கல்வி அமைச்சு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

hey