இலங்கையர்களை த னிமைப்படுத்தும் பிரித்தானியா! முதற்கட்ட நடவடிக்கை என பிரதமர் அறிவிப்புபிரித்தானியாவுக்கு சுற்றுலா வரும் 59 நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளை இரண்டு வார கட்டாய த னிமைப்படுத்துவதில் இருந்து விடுவிப்பதற்கு அ ந்நாட்டு அ ரசாங்கம் தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் கோடை விடுமுறையை கழிப்பதற்காக பெருமளவு சுற்றுலா பயணிகள் பிரித்தானியா வரவுள்ளார்கள். இந்நிலையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த சட்ட நீக்கம் எதிர்வரும் 10ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு வி டுவிக்கப்படும் நாடுகளில் ஜேர்மன், நியூசிலாந்து, கிரீஸ், அவுஸ்திரேலியா, ஹொங்கொங், தென்கொரியா, இத்தாலி, ஸ்பெயின், ஜப்பான் உட்பட 59 நாடுகள் பெயரிடப்பட்டுள்ளன.

எனினும் அமெரிக்கா, சீனா, போர்த்துக்கல், கனடா உட்பட ஆபிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் இலங்கை உட்பட ஆசிய நாடுகளை சேர்ந்தவர்களுக்கு 14 நாட்கள் த னிமைப்படுத்தல் க ட்டாயமாக்கப்பட்டுள்ளது.

த னிமைப்படுத்தல் நடவடிக்கை வி டுக்கப்பட்ட நாடுகளின் பட்டியலை வெளியிட்ட பிரித்தானிய பிரதமர், இது பிரித்தானியாவை வ ழமைக்கு கொண்டு வரும் வேலைத்திட்டத்தின் முதலாவது மற்றும் பாரிய நடவடிக்கையாகும் என குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் நாட்களில் மேலும் பல நாடுகளில் இருந்து செல்லும் சுற்றுலா பயணிகளும் இந்த வி டுவிக்கப்பட்ட ப ட்டியலுக்குள் இ ணைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக பிரித்தானிய பிரதமர் தெரிவித்துள்ளார்.

hey