இலங்கையர்களுக்கு மீண்டும் விசா : பிரித்தானியா உத்தியோகபூர்வ அறிவிப்புஇலங்கையர்கள் மீண்டும் பிரித்தானியா செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய ஜுலை மாதம் 6ஆம் திகதி முதல் பிரித்தானியாவினால் இலங்கை விசா விண்ணப்பங்கள் தொடர்பான செயற்பாடுகள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வீ.எப்.எஸ் கிலோபல் நிறுவனம் அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளது.

அதற்கமைய அன்றைய தினம் முதல் இணையத்தளம் ஊடாக இலங்கையர்கள், பிரித்தானியா விசா விண்ணப்பங்களை கொழும்பில் உள்ள விண்ணப்ப அலுவலகத்திற்கு சமர்ப்பிக்க முடியும்.

இதற்கு மேலதிக ஜுலை மாதம் 6ஆம் திகதியில் இந்தியாவில் தெரிவு செய்யப்பட்ட 11 நகரங்களில் விசா விண்ணப்ப நிலைய சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறித்த நிறுவனம் அறிவித்துள்ளது.

விசா விண்ணப்பம் தொடர்பில் இறுதி தீர்மானம் மேற்கொண்டதன் பின்னர் விண்ணப்பதாரிகளின் வெளிநாட்டு கடவுச்சீட்டினை பெற்றுக் கொள்வதற்காக தங்கள் அலுவலகத்தினால் விண்ணப்பதாரிகளுக்கு அழைக்கப்படும் என குறிப்பிடப்படுகின்றது.

இதற்கு முன்னர் விண்ணப்பதாரிகளுக்கு வழங்கப்பட்ட சந்திப்பு நேரத்திற்கு பதிலாக புதிய நேரம் ஒதுக்கிக் கொள்ள முடியும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

கொ ரோ னா வை ர ஸ் பர வல் கா ரணமாக கடந்த சில மாதங்களாக உலக நாடுகளுக்கான பயணங்கள் மு ற்றாக மு டங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

hey