வவுனியா – செட்டிகுளம் பகுதியை சேர்ந்த இளைஞர் உட்பட மூவர் பிரான்ஸ் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு தெரிவுபிரான்ஸ் சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கான 25 வீரர்கள் கொண்ட அணியில் 6 தமிழர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரான்ஸ் கிரிக்கெட் சம்மேளத்தினால் நேற்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட இந்த 25பேர் கொண்ட பட்டியலில் மூன்று ஈழத்தமிழர்களும், மூன்று தமிழ்நாட்டு தமிழர்களும் இடம்பெற்றுள்ளனர்.

வவுனியா செட்டிகுளம் வீரபுரம் பகுதியில் இருந்து சென்று தற்போது பிரான்ஸ் நாட்டில் வசித்து வரும் சுவேந்திரன் சந்திரகுமாரன் என்ற இளைஞர் பிரான்ஸ் நாட்டின் சர்வதேச கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஈழத்தமிழர்களின் பெயர்கள் பட்டியல்

  • திலீப் பாலசுப்பிரமணியம்
  • சுவேந்திரன் சந்திரகுமாரன்
  • அலிஸ்டின் ஜோன்மாரி

தமிழகத்தை சேர்ந்தவர்களின் பெயர்கள் பட்டியல்

  • தயாநிதி பெனுய்ட்
  • மஹதீர் அப்துல்ரகுமான்
  • முகமட் முகைதீன்

இந்நிலையில் தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழர்களுக்கு முகநூலில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

hey