வவுனியாவில் ஜக்கிய மக்கள் சக்தியின் பி ரச்சார கூட்டம் : பல மணிநேரமாக வெ றிச்சோ டி காணப்படும் கதிரைகள்வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் ஜக்கிய மக்கள் சக்தியின் பி ரச்சார கூட்டம் இன்றையதினம் (01.07.2020) காலை 8.00 மணிக்கு ஆரம்பமாகவிருந்த நிலையில் 9.15 மணியாகியும் அரசியல்வாதிகளிள் கதிரைகள் உட்பட மக்களின் கதிரைகளும் வெ றிச்சோடி காணப்படுகின்றது.

ஜக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் சஜீத் பிரேமதாசா மற்றும் ரிஷாட் பதியுதீன் ஆகியவர்கள் வவுனியாவில் காலை 8.00 மணிக்கும் மன்னார்

மாவட்டத்தில் காலை 10.00 மணிக்கும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவர்கள் என தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும் காலை 9.15 மணியாகியும் வவுனியாவில் இடம்பெறவுள்ள தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அரசியல்வாதிகள் கலந்து கொள்ளவில்லை

அரசியல்வாதிகளின் கதிரைகள் உட்பட மக்களின் கதிரைகளும் வெ றிச்சொடி காணப்படுவதினை அவதானிக்ககூடியதாகவுள்ளது.

இக் குறித்த கூட்டத்திற்கு வருகை தருபவர்களை ப ரிசோ தனை மேற்கொள்ளவதற்கு மண்ட வாயிலில் விசேட அ திரடிப்ப டையினர் மற்றும் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

hey