இலங்கையில் நாளை முதல் திறக்கப்படும் பாடசாலைகள்! மாணவர்களின் பெற்றோருக்கு முக்கிய அறிவுறுத்தல்இலங்கையில் கொ ரோ னா வை ரஸ் தொ ற்று காரணமாக மூ டப்பட்டிருந்த பாடசாலைகள் அனைத்தும் நாளைய தினம் திறக்கப்படவுள்ள நிலையில் மாணவர்களின் பெற்றோருக்கு முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

சளி, இ ருமல் மற்றும் கா ய்ச்சல் அ றிகு றிகள் காணப்பட்டால் பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்ப வேண்டாம் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை அரச ம ருந்தாக்க கூட்டுத்தாபனத்தின் விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன இது தொடர்பில் குறிப்பிடுகையில்,
மாணவர்களுக்கு மு கக்கவசம் அணிவதற்கு தேவையான நடவடிக்கைகளை பெற்றோர் மேற்கொள்ள வேண்டும்.

இதேபோன்று பாடசாலைகளில் மாணவர்கள் கைகளை கழுவுதற்கு வசதிகளை செய்தல், இடைவெளியை கடைபிடித்தல் போன்றவற்றில் அடிக்கடி க வனம் செலுத்துதல் அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கு உள்ள பொறுப்பாகும் என சு ட்டிக்காட்டியுள்ளார்.மேலும், நாளை முதல் நான்கு கட்டங்களின் கீழ் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக நாளை முதல் ஜுலை மாதம் 3ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வி ஊழியர்கள் பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் ஜூலை 6ஆம் திகதி தரம் 5, தரம் 11 மற்றும் தரம் 13 ஆகிய மாணவர்களுக்காக பாடசாலை இரண்டாம் கட்டமாக திறக்கப்பட உள்ளது.மேலும், மூன்றாம் கட்டமாக ஜூலை மாதம் 20ஆம் திகதி தரம் 10 மற்றும் 12ஆம் தர மாணவர்களுக்காக பாடசாலைகள் ஆரம்பமாகும்.

நான்காம் கட்டமாக முதலாம் மற்றும் இரண்டாம் தரங்களை தவிர்ந்த 3, 4, 6, 7, 8 மற்றும் 9 தர மாணவர்களுக்காக பாடசாலை எதிர்வரும் ஜுலை மாதம் 27ஆம் திகதி திறக்கப்படவுள்ளது.

hey