வவுனியாவின் சிங்கள கிராமங்களிற்கு விமல் வீரவன்ச விஜயம்அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச வவுனியாவின் சிங்கள கிராமங்களிற்கு விஐயம் ஒன்றை நேற்று மேற்கொண்டார்.

தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்வதற்காக குறித்த விஜயம் மேற்கொள்ளப்பட்டதுடன், இதன்போது வன்னி மாவட்டத்தில் பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடும் ரட்ணபிரியபந்துவை ஆதரித்து பிரச்சார கூட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அந்தவகையில் நந்திமித்திரகம, வெலிஓயா, சம்பத்நுவர போன்ற சிங்கள கிராமங்களில் குறித்த பரப்புரை கூட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. குறித்த கூட்டங்களில் அதிகளவான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

hey