போரினால் வாழ்வை இழந்த வடகிழக்கு பெண்களுக்கு புலம்பெயர் தமிழர்கள் கொடுத்த 21 கோடியே 20 லட்சம் எங்கே..? சுருட்டியது யார்..?வடகிழக்கில் நுண்கடன் நிறுவனங்களால் பா திக்கப்பட்டு வாழ்வை இ ழந்து கொண்டிருக்கும் பெண்கள், பெண் தலமைத்துவ குடும்பங்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக புலம்பெயர் தமிழர்களால் கொடுக்கப்பட்ட 21 கோடியே 20 லட்சம் ரூபாய் எங்கே?

என கேள்வி எழுப்பியிருக்கும் இலங்கை தமிழரசு கட்சியின் யாழ்.மாவட்ட மகளிர் அணி செயலளர் திருமதி விமலேஸ்வரி ஸ்ரீகாந்தறுாபன், அந்த நிதி எங்கே சென்றது? சுருட்டியவர்கள் யார்? என்பதை அம்பலப்படுத்துவோம் எனவும் கூறியுள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், வடகிழக்கு மாகாணங்களில் போரால்

பெண்கள், பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் மோ சமாக பா திக்கப்பட்டுள்ளனர். அதற்கப்பால் வடக்கு கிழக்கில் நுண் நிதிக் கடன் பி ரச்சினைகளால் பலர் குடும்பத்தோடு த ற்கொ லை செய்த சம்பவங்கள் இடம்பெற்றன.

பலர் குடும்பங்களோடு தலைமறைவு வாழ்க்கை நடத்துமளவுக்கு தள்ளப்பட்டனர். மேலும் பல ஆயிரம் குடும்பங்கள் நுண்நிதிக்கடன்கால் நாளாந்த வருமானத்தை கடனுக்கு செலுத்திவிட்டு வ றுமைக்குள் சி க்குண்டிருந்தனர்.

இவ்வாறான மக்களை க டன் சு மையிலிருந்து மீட்கவும் சுய வருமானத்தை கட்டியெழுப்பி அவர்களை வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பும் நோக்கோடு கனடாவிலுள்ள புலம் பெயர் அமைப்புக்களும் புலம்பெயர் தமிழர்களும் இணைந்து

தமிழரசுக் கட்சியூடாக 21 கோடியே 20 இலட்சம் (212 மில்லியன்) ரூபாவினை வழங்கியிருந்தனர். குறித்த நிதி வழங்கப்பட்டமை தொடர்பில் அண்மையில் திருகோணமலையில் இடம்பெற்ற தமிழரசுக்கட்சியின் மகளிர் கூட்டத்தில் குகதாசன் என்பவரால்

கணினி மூலம் வெளிப்படுத்தப்பட்டபோதும் குறித்த நிதி பயன்பாடு குறித்து இன்றுவரை எதுவும் வெளிப்படுத்தப்படவில்லை. இந்நிலையில் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் பொருளாளர் கனகசபாபதியால் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டதுடன்

தமிழரசுக்கட்சியின் வங்கிக் கணக்கு கூற்றுக்களில் குறித்த நிதி வரவு வைக்கப்படவில்லை என்று தெரிவித்திருந்தார்.நானும் இது குறித்து கேள்வியியை தொடர்ந்து எழுப்பியதன் பின்னர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தானே குறித்த நிதியினை

கனடாவிலிருந்து பெற்று வந்ததாக குறிப்பிட்டார். ஆனால் குறித்த 212 மில்லியன் ரூபாவுக்கு என்ன நடந்தது என்பது குறித்து இன்றுவரை எந்த உத்தியோக பூர்வத் தகவல்களும் வெளிப்படத்தப்படவில்லை.நுண்நிதிகளால் பா திக்கப்பட்ட குடும்பங்களுக்கோ

பெண்தலைமைத்துவக் குடும்பங்களுக்கோ குறித்த நிதியிலிருந்து இதுவரை எந்த உதவிகளும் செய்யப்பட்டதாக தெரியவில்லை.அவ்வாறாயின் குறித்த நிதி எங்கே? அந் நிதியை யார் கையாண்டார்கள்? குறித்த நிதி மோ சடி செய்யப்பட்டுவிட்டதா?

போன்ற சந்தேகங்கள் காணப்பணுடுகின்றன. இது குறித்து தமிழரசுக்கட்சி ஊடாக நிதிக்கு என்ன நடந்தது என்பது குறித்து விசாரணை செய்வதற்கு அழுத்தம் கொடுப்போம். நிச்சயமாக இது வெளிப்படுத்தப்படும் என்றார்.

hey