நாளை முதல் முகக்கவசம் அணியாதவர்களுக்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தல் : மக்களுக்கு எ ச்சரிக்கை!!முகக்கவசங்கள்

நாட்டில் முகக்கவசங்கள் அணியாதவர்களை 14 நாட்களுக்கு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நடைமுறையானது நாளை முதல் க டுமையாக அமுலாகும் என மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் எச்சரித்துள்ளார்.

அத்துடன், முகக்கவசங்கள் அணியாதவர்கள் தொடர்பில் ஆராய நாளை முதல் விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். அரசினால் வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றாது பெரும்பாலானவர்கள் செயற்படுகின்றனர்.

மேல் மாகாணத்தில் நேற்று மாத்திரம் 6725 பேர் முகக்கவசம் அணியாது பொது இடங்களில் பயணித்துள்ளனர். இவர்கள் அனைவருக்கும் க டுமையான எ ச்சரிக்கை வழங்கப்பட்டது.

இதனால் நாளை முதல் முகக்கவசங்களை அணியாதவர்கள் 14 நாட்களுக்கு சுய தனிமையில் ஈடுபடுத்தப்படுவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

hey