தமிழ்த் தேசிய கூட்டமைப்பு 20 ஆசனங்கள் கிடைக்கும்! – உறுதியாக கூறுகிறார் சம்பந்தன்பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு 20 ஆசனங்களைக் கைப்பற்றும் என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். திருகோணமலையிலுள்ள இன்று நடத்திய ஊடகச் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

கடந்த முறை 16 ஆசனங்களைக் கைப்பற்றிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, இம்முறை 20 ஆசனங்களை பெறும். குறிப்பாக, யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய நான்கு மாவட்டங்களிலும் கூடுதல் ஆசனங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

தமிழ் பேசும் மக்கள் தமது வாக்குகளைப் பிரிக்காமல், ஒரு குடையின் கீழ் தமது வாக்குகளை அளித்து, சர்வதேசத்துக்கு ஒரு நல்ல செய்தியை வெளிப்படுத்த வேண்டும். தமிழ் மக்களுக்கான சரியான ஒரு அரசியல் தீர்வைப் பெற வேண்டிய சூழலில் இருப்பதாகவும், எனவே, இம்முறை எந்த அரசாங்கம் வந்தாலும் சேர்ந்து செயற்படத் தயார் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

hey