வடக்கு-கிழக்கு மாகாணத்தில் பேரீச்சை பயிர்ச்செய்கை முன்னெடுக்க திட்டம்!பேரீச்சை பயிர்ச்செய்கைத் திட்டம் 1998 காலப்பகுதியில் தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம் மற்றும் வனவள பாதுகாப்பு பிரிவு சக்தியின் அனுசரணையினால் முன்னெடுக்கப்பட்ட கருத்திட்டடமாகும்.

வ.சகாதேவன், தாடி ஐயா, திருநாவுக்கரசு போன்றோர் இத்திட்டத்திற்கு முன்னின்று உழைத்து பங்களிப்பு செய்தவர்கள் ஆவர்.

வடக்கு-கிழக்கு மாகாணத்தில் மணற்பாங்கான தரிசு நிலங்களில் வடக்கு – கிழக்கு பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்தவல்ல பணப்பயிராகிய பேரீச்சையானது நவீன தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட இருக்கிறது .

இந்த பாரிய திட்டத்தின் மூலம் உள்ளூர் வேலைவாய்ப்புகள் அதிகரிப்பதோடு, எதிர்காலத்தில் வடக்கு-கிழக்கின் சிறிய நிலமுடையாளர்களும் இப்பயிர்ச்செய்கையை மேற்கொண்டு உயர்வருமானதை பெறுவதற்கான வாய்ப்பும் இதன்மூலம் ஏற்படக்கூடிய நிலையுண்டு .

மீன்பிடித்கைத்தொழிலை மாத்திரமே நம்பியிருக்கும் கரையோர மக்களில் பெண்களுக்கான வேலைவாய்ப்பையும், தொழில் விருத்தியையும் மேம்படுத்தக்கூடிய வகையில் எதிர்காலத்தில் பேரீச்சை பயிர்செய்கை வடக்கு – கிழக்கு பிரதேசங்களில் பயிரிடப்படுவதால் எதிகாலத்தில் அப்பிரதேசங்கள் வளம்கொழிக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை .

இந்த நிலையில் பேரீச்சை பயிர்ச் செய்கையை ஊக்குவிக்கவுள்ள நிறுவனம் தனது ஆய்வுப்பெறுபேறுகளின் அடிப்படையில் பொருத்தமான இடமொன்றை அந்த பிரதேச மக்களின் சமூக மட்ட அமைப்புகளின் ஒத்துழைப்புடனும், சுற்றுச் சூழலுகுக்கு பா திப்பு ஏற்படுத்தாத வகையிலும் ஒரு முன்னோடி திட்டமாக (பைலட் ப்ராஜெக்ட்) மேற்கொண்டு, அந்த பிரதேசத்தின் வாழ்க்கைத் தரத்தையும், அபிவிருத்தியையும் மேற்கொள்ள ஆவன நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

125 மில்லியன் நிதி முதலீட்டில் பேரீச்சை பயிர்ச்செய்கைக்கான முதலாவது உத்தேச திட்டம் வரையப்பட்டுள்ளது . எனவே வடக்கு – கிழக்கின் தரிசு நிலங்களை பசுமை நிறைந்த சோலைகளாக எதிர்காலத்தில் மாற்றிட இத்திட்டத்தின் மூலம் முடியும். இந்த பசுமை மாற்றத்திற்கு வடக்கு – கிழக்கு மக்கள் நிச்சயமாக தயாராகவே இருப்பார்கள்.

பேரீச்சைப் பயிர்செய்கைக்கு அதிகளவிலான நீர் தேவைப்படாது. அது வரட்சியான நிலங்களில் வளரக்கூடிய தன்மை கொண்டது. ஈச்சை மரங்களை அதிகளவில் கொண்டுள்ள இடங்களில் பேரீச்சை மரங்கள் வளர்வதற்கான சூழ்நிலைகள் உண்டு.

பேரீச்சை பயிர்செய்கையானது எந்தவிதமான சுற்றுச்சூழற் பா திப்பை ஏற்படுத்த மாட்டாது. வேறு தாவரங்கள் வளராத தரிசான, வறட்சியான, உவர் நிலங்களில் பேரீச்சை பயிர்ச்செய்கை மேற்கொள்ள முடியும்.

ஆசிய நாடுகளின் முக்கிய பணப்பயிர் செய்கைகளில் இந்த பேரீச்சையும் ஒன்றாக காணப்படுகின்றது. வடக்கு – கிழக்கு பிரதேசங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் பேரீச்சையை பயிரிடுவதன் மூலம் மக்களின் பொருளாதாரத்தை உயர்த்த முடியும்.

பேரீச்சை வளர்ப்புப் மூலம் பலன் பெறுவதற்கு ஏதுவான நில அமைப்பு, மண்வளம், காலநிலை என்பவை சிறப்பாக வடக்கு – கிழக்கு மாகாணங்களின் கடற்கரையோரப் பகுதிகளில் காணப்படுகின்றது .

மட்டக்களப்பு, மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம், தீவகம் ஆகிய பகுதிகளில் இவை பரீட்ச்சார்த்தமாக பயிரிடப்பட்டு வெற்றியளித்துள்ளது.

ஒரு ஏக்கருக்கு 1 மில்லியன் தொடக்கம் 10 மில்லியனுக்கும் மேலான வருமானத்தை இப்பயிர்ச்செய்கை மூலம் ஈட்டித்தரும்.

கடந்த சில வருடங்களுக்குள் இதே போன்ற பேரீச்சை வளர்ப்பு திட்டம் வடமராட்சி கிழக்கு பகுதியில் முன்னெடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோது சிலர் பொய்யான ஊடக பரப்புரையை செய்து அத்திட்டத்தை ஆரம்பிக்கவிடாது குழப்பம் விளைவித்தனர்.

இதே போன்றதொரு சம்பவம் இனியும் நிகழாமல் இருக்க மக்கள் விழிப்பாக இருக்கவேண்டும்.

எமது மக்களின் எதிர்கால நலனுக்காக இவ்வளவு பெரிய முதலீட்டை செய்ய தமிழ் முதலீட்டாடாளர்களை ஊக்கப் படுத்துவது எமது பகுதியை வழமாக்கும் என சமூக ஆர்வலர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

hey