வவுனியாவுக்கு விஜயம் செய்த சிவில் பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் நாயகம்சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரியல் அட்மிரட் ஆனந்த பீரிஸ் வவுனியாவிற்கு இன்று (25.06.2020) பிற்பகல் விஜயம் செய்துள்ளார்.

வவுனியா, மாமடு பகுதியில் உள்ள சிவில் பாதுகாப்பு படை முகாமிற்கு வருகை தந்த அவர் விவசாய திட்டங்களை விரிவுபடுத்தும் முகமாக மரநடுகை நடவடிக்கையை ஆரம்பித்து வைத்தார். அத்துடன் அவர்களது தோட்டங்களையும் பார்வையிட்டார்.

அத்துடன், சிவில் பாதுகாப்பு படையினர் எதிர் நோக்கும் பிரச்சனைகள் மற்றும் அவர்களது தேவைகள் குறித்தும் கலந்துரையாடியிருந்தார். சிவில் பாதுகாப்பு துறையினரின் செயற்பாடுகளை மேலும் விரிவுபடுத்துதல் சம்மந்தமாகவும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் வவுனியா சிவில் பாதுகாப்பு படை பொறுப்பதிகாரி கேணல் ருவன் மில்லவான மற்றும் சிவில் பாதுகாப்பு படையினர் என பலரும் கலந்து கொண்டனர்.

hey