வவுனியாவில் இரண்டாவது நாளாகவும் தொடரும் காஞ்சூரமோட்டை மக்களின் போ ராட்டம்வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட காஞ்சூரமோட்டை மக்கள் வனவள திணைக்களத்தின் அ ட்டூழியங்களை க ட்டுப்படுத்துமாறு கோரி இரண்டாவது நாளாகவும் போ ராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது போ ராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை நேற்று வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் இ.பிரதாபன் மற்றும் வடக்கு பிரதேச சபை தலைவர் இ.தணிகாசலம் ஆகியோர் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.

வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட காஞ்சூரமோட்டை மற்றும் நாவலர் பண்ணை பகுதிகளில் போ ர் சூழல் காரணமாக 1980, 90 காலப்பகுதியில் இடம்பெயர்ந்து இந்தியா உட்பட வேறு பகுதிகளிற்கு இடம்பெயர்ந்து சென்ற மக்கள் 2012 ஆம் ஆண்டளவில் மீண்டும் வந்து காடுகளாக கிடக்கும் தமது காணிகளை து ப்புரவாக்கி த ற்காலிக்கொ ட்டில்கள் அமைத்து வசித்து வந்துள்ளனர்.

அவ்வாறு மீளக்குடியேறிய 38 குடும்பங்களுக்கு தேசிய வீடமைப்பு அதிகார சபையினூடாக வீட்டு திட்டத்திற்கான முதற்கட்ட நிதி வழங்கப்பட்டுள்ள நிலையில் பல வீடுகள் அமைக்கப்பட்டு முடிவுறாத நிலையில் உள்ளது.

இந்நிலையில் குறித்த காணிகள் தமக்குரியதென்று வனவள திணைக்களத்தால் நீண்ட காலமாக கூறப்படுவதுடன், காணிகளில் து ப்புரவு பணிகளை மேற்கொள்ளும் போது தடையையும் ஏற்படுத்தி வருவதுடன், காணிகளை து ப்புரவாக்கினாலோ அல்லது கட்டுமான பணிகளை மேற்கொண்டாலோ கைது செய்வோம் எனவும் மக்களை எ ச்சரித்து வருகின்றனர்.

இந்நிலையில் வனவள திணைக்களத்தினால் தொடர்ந்து அ ச்சுறுத்தலுக்குள்ளாகி வருகின்ற மக்கள். அனைத்து த ரப்பினர் மீதும் நம்பிக்கை இ ழந்த நிலையில் தமக்கான தீ ர்வினை கோ ரி நேற்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

குறித்த போ ராட்டம் இன்றும் தொடர்ந்ததுடன், தமக்கான தீர்வு கிடைக்கும் வரையில் தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக வவுனியா மாவட்ட வனவள திணைக்களத்தின் பொறுப்பதிகாரியான கே.நாயணயக்காரவிடம் வினவிய போது,

குறித்த காணிகளில் முன்னர் மக்கள் வாழ்ந்தமைக்கான அடையாளங்கள் காணப்பட்டால் அதனை அடையாளப்படுத்திய பின்னர் அவர்களுக்கு வழங்குவதில் தமக்கு ஆட்சேபனை இல்லை.

அக்காணிகளை அடையாளப்படுத்தும் நடவடிக்கைகளை தொடர்புடைய ஏனைய அரச திணைக்களங்களோடு இணைந்து தாம் மேற்கொள்வதற்கு தயாராக இருப்பதாகவும், இவ்விடயம் தொடர்பாக வடக்கு பிரதேச செயலகம்,மற்றும் மாவட்ட செயலகங்களுக்கும் ஏற்கனவே தெரியப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

hey