பாடசாலை மாணவர்களுக்கு ஓகஸ்ட் மாத விடுமுறை இரத்துபாடசாலை மாணவர்களுக்கு எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் வழங்கப்படும் விடுமுறையை இரத்து செய்வதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை செப்டம்பர் மாதம் வரையில் பிற்போடப்பட்டுள்ளமையினால், இரண்டாம் தவணைக்கான விடுமுறை ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் என் எம் எம் சித்ராநந்த தெரிவித்துள்ளார்.

மேலும் கல்விப் பொதுதராதர உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 7ஆம் திகதி நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதேநேரம், ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 13ஆம் திகதி நடத்துவதற்கு கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது.

இதேவேளை எதிர்வரும் 29ஆம் திகதி முதல் நான்கு கட்டங்களின் கீழ் பாடசாலைகளை மீண்டும் திறக்கவுள்ளதாக கல்வி அமைச்சு ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

hey