இரவு தூங்கும் முன் இதை குடித்தால் குறட்டை வராது,ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும்



அதிக அளவில், மன வேதனை, தூக்கம் கெட்டு ஏற்படும் உடல் வேதனை மற்றும் மன உளைச்சல் ஆகிய துன்பங்களை அடைய வைக்கும் ஒரு மோசமான வியாதி.குடும்பத்தலைவர் விடும் குறட்டையால், எத்தனைக் குடும்பங்கள் பிரிந்திருக்கின்றன, எத்தனை குடும்பத்தலைவிகள், தாங்கள் படும் இன்னலை வெளியே சொல்லமுடியாமல், இரவுநேரம் வந்தாலே அஞ்சி நடுங்கி வாழ்கின்றனர். யாருக்கெல்லாம் குறட்டை வருகிறது? சளித்தொல்லையால் பாதிக்கப்படுபவர்கள்,மது அருந்தும் பழக்கம் உள்ளோர், புகைப் பழக்கம் உள்ளோர்,அதிக உடல் எடை, பிறவிக்குறைபாடு மற்றும் வயதாவதன் காரணமாக, காற்று மூக்கின் வழியே உள்ளே செல்லும்போது,

சளி பிரச்னைகளினால் மூச்சுக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு காற்று சரியாக உள்ளிழுக்கப்பட முடியாமல் தன்னிச்சையாக வாய் வழியே,சுவாசக் காற்று செல்ல முற்படும்போது, தொண்டைக்குழாய் அடைப்பினால், சரியாக சுவாசிக்க முடியாமல், சத்தம் வருகிறது.இந்த சத்தமே, குறட்டையாகிறது.

குறட்டையால் வரும் நோய்கள்: இரவில் உறக்கத்தில் குறட்டை விடுபவர்கள், பகலில் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். அதிக சோர்வு, அன்றாட வேலைகளில் அக்கறை செலுத்த முடியாமல்,மன உளைச்சல்களுடனே வாழ்கின்றனர். இத்தகைய குறட்டை, இதயத்திற்கு

பாதிப்பை தந்து இதய நோய்களைக் கொடுத்துவிடும்.எல்லோருக்கும் துன்பங்களையே பரிசாக அளிக்கும் இந்தக் கொடூரக் குறட்டையை, அவர்களிடமிருந்து ஓட ஓட விரட்டி அவர்கள் வாழ்வில் மற்றும் குடும்பத்தில் நிம்மதியை அடைய வைப்பது எப்படி?என்ன செய்யலாம்? வாருங்கள் பார்க்கலாம்

hey