பிரபல தொகுப்பாளர் கோபிநாத்தின் அண்ணனை பார்த்திருக்கிறீர்களா..? அச்சு அசல் கோபிநாத் மாதிரியே இருக்காரே : புகைப்படம் இதோவிஜய் தொலைக்காட்சி பல்வேறு நடிகர் நடிகைகளுக்கு சினிமா பாதையை வழி வகுத்துக் கொடுத்துள்ளது அதிலும் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றிய சிவகார்த்திகேயன், மாகாபா, ரம்யா, டிடி, பணியாற்றிய ரக்சன் என்று பல்வேறு நபர்கள் தற்போது சினிமாவில் நடித்து வருகின்றனர். தொகுப்பாளராக விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றினால் சினிமா வாய்ப்பு பெற்று விடுகிறார்கள் என்ற ஒரு மேஜிக்கை விஜய் டிவி ஏற்படுத்தியுள்ளது தற்போது விஜய் தொலைக்காட்சியில் மற்றும் ஒரு பிரபல தொகுப்பாளரான நீயா நானா கோபிநாத்தும் ஹீரோவாக களமிறங்க இருக்கிறார் என்ற தகவல் தான் தற்போது தொலைக்காட்சி வட்டாரத்தில் ஹாட் நியூஸ்.

தமிழ் தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி தொகுத்து வழங்கிய ஷோவான நீயா நானா மூலம் அறிமுகமாகி தமிழ் மக்கள் மத்தியில் தனக்கென்று ஒரு இடம் பிடித்தவர் கோபிநாத் அவர்கள்.நீயா நானா கோபிநாத் என்றால் தெரியாதவர் யாரும் இல்லை.இவர் தமிழ் சின்னத்திரைக்கு வருவதற்கு முன் இவர் ரேடியோ ஜாக்கியாக பணியாற்றி இருக்கிறார்.

பின்பு அப்படியே இவரது பேச்சு திறமையால் மக்கள் மத்தியில் பேசப்பட்டு நீயா நானா மக்கள் கருத்து கூறும் ஷோவை தொகுத்து வழங்க தொடங்கினர்.

இவருக்கு இந்த நீயா நானா ஷோ மூலம் பல தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர்.இவர் வீ ஜே வாக மட்டுமல்லாமல் சில புத்தகங்களையும் எழுதியுள்ளார்.இவர் எழுத்தில் வெளியான புத்தகங்கள் அனைத்தும்

மக்களுக்கு பிடித்து இருந்தது.அதில் ப்ளீஸ் இந்த புக்க வாங்கதீங்க, மண்ட பத்திரம், நேர் நேர் தேமா என பல புத்தகங்களை எழுதியுள்ளார்.இவருக்கு துர்கா என்பவருடன் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் முடிந்தது.

அப்படிபட்ட ஒரு ஹிட் ஷோவை தொடர்ந்து பல வருடங்களாக நடத்தி வருகிறார் கோபிநாத். நல்ல தமிழ் பேச்சாளரான இவரை பலரும் ஒரு நல்ல உதாரணமாக எடுத்திருக்கிறார்.

இவருக்கு பிரபாகரன் சந்திரன் என்று ஒரு அண்ணன் இருக்கிறாராம். அவர் தற்போது நாம் இருவர் நமக்கு இருவர், இன்னும் சில சீரியல்களில் நடித்து வருபவர்.

hey