உங்க கழுத்து கருப்பா, அசிங்கமா இருக்கா..? ஈஸியா போக்க சுப்பர் டிப்ஸ் இதோ..?அழகை விட உள்ளமும், மனமும் தான் பிரதானம் என்றாலும் அழகும் அவசியம் தான். ஒருவர் பார்த்த மாத்திரத்தில் நம்மீது ஈர்க்கபட நல்ல அழகும் அவசியம். கருப்பு, வெள்ளை என நிறம் மட்டுமே அழகுக் கான குறியீடு அல்ல. கருப்பாக இருந்தாலும்கூட பலர் அழகாக இருப்பார்கள்.இன்னும் சிலருக்கோ முகம் நல்ல வெள்ளையாகவும், அழகாகவும் இருக்கும். ஆனால் கழுத்து மட்டும் கருப்பாக இருக்கும். அது அவர்களின் அழகையே ஸ்பாயில் செய்துவிடும். சிலர் இதற்காகவே வித, விதமாக காஸ்ட்லியான க்ரீம்களை வாங்கித் தேய்த்துக் கொள்வார்கள். ஆனால் அதெல்லாம் அவசியமே இல்லை. சாதாரணமாக நம் வீட்டில் வீட்டில் கிடைக்கும் அரசிமாவு, பாலை வைத்துக்கொண்டே நம் கழுத்தின் அழுக்கைப் போக்கிவிடலாம்.

வாருங்கள் இந்தப் பதிவில் இதுகுறித்துப் பார்ப்போம். முதலில் ஒரு டேபிள் ஸ்பூன் அரிசி மாவை பாலில் சேர்த்துக் கலக்க வேண்டும். தொடர்ந்து அதை கரு, கருவென இருக்கும் நம் கழுத்துப் பகுதியில் தடவி மிகவும் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும்.

தொடர்ந்து அதை பத்து நிமிடங்களுக்கு ஊறவைத்து குளிர்வான தண்ணீரால் கழுத்தை கழுவலாம். வாரத்துக்கு மூன்றுமுறை இதை மட்டும் பாளோ செய்தாலே கருப்பான கழுத்து பிரச்னை போய்விடும்.

hey