நடிகை வரலட்சுமியா இது..? அப்போ எப்படி இருந்துள்ளார் தெரியுமா..? அடையாளமே தெரியலயே : புகைப்படம் இதோ..?தற்போது சினிமாவில் வாரிசு நடிகர்களை தாண்டி வாரிசு நடிகைகளும் படங்களில் நடித்தி வருகின்றனர். அந்த வகையில் சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் மகளான வரலக்ஷ்மி யை அனைவருக்கும் நன்றாக தெரிந்திருக்கும். சரத்குமாரை உரித்து வைத்தாற்போல் அப்படியே இருக்கும் வரலக்ஷ்மி படங்களிலும் அவருக்கு சற்றும் நடிப்பில் குறையாமல் நடித்து வருகிறார். 36-வயதான வரலக்ஷ்மி வெளிநாட்டில் கல்லூரி படிப்பை முடித்து நடனத்தின் மீது கொண்ட ஆர்வத்தால் நடன கலையை கற்று கொண்டு பல போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில் வரலக்ஷ்மி பிரபல இயக்குனர் இயக்கிய பாய்ஸ் படத்தில் நடிக்க தேர்வானார்.மேலும் சரோஜா, காதல் போன்ற படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் சில காரணங்களால் அந்த வாய்ப்பை தவறவிட்டார்.

இந்நிலையில் 2012-ம் ஆண்டு இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்பு நடித்த போடா போடி படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அந்த படத்தில் இவரது நடிப்பு மக்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து பல படங்களில் நடிக்க ஒப்பந்தமானார் வரலக்ஷ்மி.

தாரை தப்பட்டை படத்தில் இவரது நடிப்பு வேற லெவலில் இருந்தது.மேலும் இவர் நிபுணன், சண்டகோழி 2, மாரி 2, சத்யா,ச ர்கார் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.வரலக்ஷ்மிக்கு கதாநாயகி கேரக்டரை விட நெகட்டிவ் கதாபாத்திரங்களே அற்புதமாக பொருந்துகிறது.

சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழில் அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். இதன்பின் சர்கார்,விக்ரம் வேதா, மாரி 2 உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

ஆனால் தமிழ் திரையுலகில் இவருக்கு கிடைக்காதா ரசிகர்களின் ஆதரவு, தற்போது தெலுங்கில் இவர் நடித்து வரும் படங்களுக்கு கிடைத்துள்ளது.ஆம் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான கிரேக், நாந்தி என இரண்டு திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் சூர்யாவுடன் இணைந்து நடிகை வரலட்சுமி சரத்குமார் சில ஆண்டுகளுக்கு முன் எடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது.இதில் உடல் எடை மெலிந்துபோய் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு தோற்றமளிக்கிறார்.இதோ அந்த புகைப்படம்

hey