இந்த ஒரு பொருளால் தோசைக்கல்லை இப்படி கழுவி பாருங்க புதுமாறி மின்னும்..! சூப்பர் டிப்ஸ்அடுப்பில் தோசைக்கல்லில் வைத்து விட்டு மறந்து விடுவோம். அந்த தோசைக்கல் தீஞ்சு, கருகிப் போய் விடும். அதன் பின்பு அந்தக் கல்லில் தோசை வார்ப்பது சிரமமாக இருக்கும்.சிலபேர் தோசையை ஊற்றி விட்டு அந்த தோசையை கருக விடுவார்கள். அதன் பின்பு அந்த தோசையை எடுத்து விட்டு அடுத்த தோசை ஊற்றுவது மிக மிக சிரமமாக இருக்கும்.இதனால், கருதிய தோசைக்கல்லில் தோசை வார்த்தால், கட்டாயம் அடுத்த தோசையும் ஒட்டிக்கொள்ள தான் செய்யும். இப்படி தோசைக்கல் அதிகப்படியாக காய்ந்து தீஞ்சு போய்விட்டால், அதை உடனடியாக சரி செய்வது எப்படி என்பதை பார்ப்போம்…வீட்டில் இருக்கும் பல் தேய்க்கும் பேஸ்ட் போதும். இந்த தோசை கல்லை சரி செய்ய.

ஒரு பச்சை கலர் சாதாரண ஸ்க்ரப்பரில் இரண்டு பின்ச் அளவு பேஸ்ட் எடுத்துக் கொள்ளுங்கள். தண்ணீர் ஊற்ற வேண்டாம். தோசைக்கல் முழுவதும் அந்த நாரில் இருக்கும் பேஸ்டை பரவலாகத் தடவி லேசாக அழுத்தம் கொடுத்து தேய்த்து விட வேண்டும்.கருகிப் போன அத்தனை பிசுபிசுப்பும் உடனடியாக நீங்கிவிடும். அதன்பின்பு சோப்பு போட்டு தோசைக்கல்லை கழுவ வேண்டாம்.

வெறும் தண்ணீர் ஊற்றி தோசை கல்லை நன்றாக கழுவி விட்டு, தோசை வார்த்து பாருங்கள். உங்களுக்கே தெரியும். சில பேர் நினைக்கலாம் பேஸ்ட் வாடை அந்த தோசைக்கல்லில் வருமா? என்று, நிச்சயமாக வராது.

அப்படியே உங்களுக்கு சந்தேகம் இருந்தால் பேஸ்ட் போட்டு வெறும் தண்ணீரில் தோசைக்கல்லை கழுவி விட்டு, அதன் பின்பு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து லேசாக சூடு செய்து,

லேசாக தூள் உப்பை தோசைக்கல்லில் ஒருமுறை நன்றாக தூவி, உப்பை ஒரு துணி கொண்டு துடைத்துவிட்டு அதன் பின்பு தோசை வார்த்தால், எந்த ஒரு வாசமும் வராது. தோசை, கல்லில் ஒட்டாமல் வரும். ட்ரை பண்ணி பாருங்க நண்பர்களே

hey