வவுனியா புதூர் ஆலயத்திற்கு சென்ற பக்தர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர் ; வடக்கில் ஓர் சட்டம் தெற்கில் ஓர் சட்டமா?வவுனியா புதூர்

வவுனியா புளியங்குளம் பகுதியில் அமைந்துள்ள புதூர் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் இன்றையதினம் இடம்பெற்று வருகின்ற நிலையில் ஆலயத்திற்கு வருகைதரும் மக்கள் திருப்பி அனுப்பி அனுப்பி வைக்கப்படுகின்றனர்

கொ ரோ னா வை ரஸ் தொ ற்று காரணமாக தற்போது நாடு முழுவதும் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன.

அதனையடுத்து புதூர் ஆலய உற்சவத்திற்கு 80 நபர்கள் மாத்திரம் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் ஆலய உற்சவத்திற்கு வருகை தந்துள்ளனர்.

இந்நிலையில் ஆலயத்திற்கு வருகை தருகின்ற மக்களை திருப்பியனுப்பும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

அனுமதி வழங்கப்பட்டவர்களை தவிர ஏனையவர்களை ஆலய உற்சவத்திற்கு வருகை தர வேண்டாமென பொலிஸார் வேண்டுகொள் விடுத்துள்ளனர்

hey