இலங்கையர்களுக்கு 20000 டொலர் அன்பளிப்பு : இணையத்தில் நடக்கும் பாரிய மோசடி!!தொழிலாளர் திணைக்களத்தினால் 20000 டொலர் வழங்கப்படுவதாக கூறி இலங்கையர்கள் ஏ மாற்றப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. (whatsget.onlinelabourdept) என்ற பெயரின் கீழ் தொழிலாளர் திணைக்களத்திற்கு இணையான விலாசத்தில் செயற்படும் இணையத்தளம் மூலம் இந்த மோ சடி நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.

இந்த இணையத்தளத்தில் இணைந்து 20000 டொலர் நன்மையை பெற்றுக்கொள்ளுமாறு வட்ஸ்அப், பேஸ்புக்,மெசென்ஜர் போன்ற சமூக வலைத்தளங்கள் ஊடாக இலங்கை மக்களுக்கு தகவல் பகிரப்படுகின்றன.

இது தொடர்பில் இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கத்திற்கு பல மு றை ப்பாடுகள் கிடைத்துள்ளன. இந்த இணையத்தளம் ஊடாக இலங்கை மக்களின் தரவுகள் பெற்றுக் கொள்வதற்கும், கையடக்க தொலைபேசிகளுக்கு அவசியமற்ற செ யலிகளை பொ ருத்தவதற்கும் முடியும் என கூறப்படுகின்றது.

தொழிலாளர் திணைக்களத்தின் பெயர் குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் இந்த தகவல் தொடர்பில் எ ச்சரிக்கையாக இருக்குமாறு, இலங்கை மக்களிடம் இலங்கை தகவல் தொழில் நுட்ப பிரிவு அ றிவுறுத்தியுள்ளது.

hey