சில்லுனு ஒரு காதல் நடிகை பூமிகாவின் கணவரை பார்த்துள்ளீர்களா.. அழகிய ஜோடியின் புகைப்படம்பொதுவாக திரையுலகில் பொறுத்தவரை நடிகர்களுக்கு கிடைக்கும் வரவேற்பும் பிரபலமும் நடிகைகளுக்கு அவ்வளவாக மக்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் கிடைப்பதில்லை. இதற்கு காரணம் தற்போது பல புதுமுக இளம் நடிகைகள் தொடர்ந்து சினிமாவிற்கு வந்த வண்ணம் இருப்பதாலும் மேலும் நடிகைகள் ஒரு வயதிற்கு மேல் சினிமாவில் கதாநாயகியாக நடிக்க முடியாமல் போகிறது. இந்த வகையில் அவர்கள் என்னதான் முன்னணி நடிகையாக பல முன்னணி நடிகர்களுடன் நடித்து இருந்தாலும் ஒரு வயது மேல் அவர்கள் திரைபடங்களில் கதாநாயகியாக நடிக்க மறுக்கப்படுகின்றனர். மேலும் கதாநாயகர்களும் ரசிகர்களும் இளம் நடிகைகளையே பெருமளவு எதிர்பார்க்கின்றனர்.

இப்படி இருக்கையில் அந்த முன்னணி நடிகைகள் ஒரு கட்டத்திற்கு மேல் திரைத்துறையில் மட்டுமின்றி ரசிகர்ளின் மனதில் இருந்து மறைந்து போய் விடுகின்றனர்.மேலும் அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்ன செய்கிறார்கள் என்பதே ஒரு புரியாத புதிராக மாறி விடுகிறது.

இவ்வாறான நிலையில் 90-களின் காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராகவும் ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாகவும் கொடி கட்டி பறந்தவர் பிரபல நடிகை பூமிகா. டெல்லியை பூர்விகமாக கொண்ட இவர் தெலுங்கில் யுவகுடு எனும் வெற்றி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

விஜய் நடிப்பில் வெளிவந்த ‘பத்ரி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பூமிகா.இதன்பின் சூர்யா நடிப்பில் வெளியான ‘சில்லுனு ஒரு காதல்’ திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய அளவில் பெயரை பெற்று தந்தது.

இன்றும் பூமிகா நடித்திருந்த ஐஸ்வர்யா கதாபாத்திரத்தை யாராலும் மறக்கமுடியவில்லை.தமிழில் மட்டுமின்றில், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய பல மொழிகளில் பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வந்தார்.

மேலும், கடந்த 2007ஆம் ஆண்டு பரத் என்பவரை திருமணம் செய்துகொண்ட நடிகை பூமிகா, ஒரு ஆண் குழந்தையையும் பெற்றார்.இந்நிலையில் நடிகை பூமிகா தனது கணவர் பரத்துடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் உலா வருகிறது.இதோ அந்த அழகிய ஜோடியின் புகைப்படம்

hey