உங்க வீட்டில் கொசுத் தொல்லையா..? வீட்டிலேயே தயாரிச்சு இயற்கை லிக்யூட்டில் கொசுவை விரட்டுங்ககொசுத்தொல்லையை தவிர்க்க என்ன தான் லிங்கியூட்,காயில் பிராண்ட்களை வாங்கி வைத்தாலும், ஒரு கட்டத்தில் அவை நம் உடல்நலனையும் சேர்த்தே கெடுத்து விடுகிறது.இன்னொன்று கொசுக்களே இப்போதெல்லாம் இவைகளுக்கு வீழ்வதும் இல்லை.கொசுக்கள் இன்று மனிதவாழ்வையே அச்சுறுத்தும் எமனாக உள்ளது. அதிலும் ஏடிஸ் கொசுவெல்லாம் கடித்தால் உடனே டெங்கு காய்ச்சல் வரும் அபாயமும் இருக்கிறது. இதில் இருந்து தப்பிக்க வீட்டிலேயே சூப்பராக இயற்கை திரவம் ஒன்றை தயார் செய்ய முடியும்.ஓமவள்ளி என்றும் கற்பூரவள்ளி என்றும் அழைக்கப்படும் செடியின் இலைகளை பறித்துக் கொள்ள வேண்டும்.இந்த இலைக்கு சளி பிரச்னையை தீர்க்கும் வலிமை இருப்பது கூடுதல் தகவல்.இதேபோல் துளசி,வேப்பிலை ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதாவது எடுக்கும் அளவில் வேப்பிலை 50 சதவிகிதமும், துளசி, கற்பூரவள்ளி ஆகியவை தலா 25 சதவிகிதமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.இதில் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்சியில் போட்டு அரைக்க வேண்டும்.பின்னர் மீண்டும் சிறிது தண்ணீர் சேர்த்து இரண்டாவது முறை அரைக்க வேண்டும். இப்படி அரைக்கும் போது தண்ணீர் குறைவாகவே சேர்க்க வேண்டும்.

இதன் பின்னர் வானொலியில் ஒரு கடாய் வைத்து அதில் 50 மில்லி தேங்காய் எண்ணெய் சேர்த்து, அதனோடு நாம் மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் இலைக்கரைசலை சேர்த்து பத்து நிமிடங்கள் கொதிக்கவிட வேண்டும். இந்த நேர இடைவெளியிலேயே நம் வீட்டில் பயன்படுத்தி மருந்து தீர்ந்து தூக்கி போட்டு இருக்கும்

கொசுவர்த்தி காலியான லிக்யூட் பாட்டிலை எடுத்துக் கொள்ள வேண்டும்.அதில் மேலே இருக்கும் தண்டு பகுதி உடைந்துவிடாமல் லாவகமாக கழட்டி வைத்துக்கொள்ள வேண்டும். அடுப்பில் எண்ணெயின் ஈரமே இல்லாத அளவுக்கு முழுக்க எண்ணெய் ஆனதும் புகை வரும்.அப்போது அடுப்பை அணைத்துவிட்டு ஆறவைக்கணும்.

இந்த கரைசல் ஆறியதும் வடிகட்டி அதனுடன் 50 மில்லி கரைசலுக்கு மூன்று கற்பூரங்களை போட வேண்டும். இப்போது இதனை பாட்டிலில் அடைத்து செயற்கை லிக்யூட்க்கு மாற்றாக பயன்படுத்தலாம். இதை தினமும் அரை மணிநேரம் போட்டு விட்டாலே கொசுக்கள் அண்டவே அண்டாது. ஒரு முறை நிரப்பி வைத்திருக்கும்

இந்த லிக்யூட் ஒரு மாதத்துக்கு போதுமானதாக இருக்கும்.அப்புறம் என்ன?காலியான லிக்யூட் பாட்டில்களில் இனி இயற்கை திரவத்தைநீங்களே உற்பத்தி செஞ்சு, ஆரோக்கியமான முறையில் கொசுக்களை ஒழிச்சு கட்டுங்க செய்முறை வீடியோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது

hey